Home சினிமா காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதுடார்ஜிலிங் படப்பிடிப்பில் இருந்தபடி ரஜினிகாந்த் பேட்டி

காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதுடார்ஜிலிங் படப்பிடிப்பில் இருந்தபடி ரஜினிகாந்த் பேட்டி

35
0
SHARE

சென்னை, ஜூன் 16&

காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று டார்ஜிங் படப்பிடிப்பில் இருந்தபடி ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்து உருவாகியுள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. காலா படம் வெளியாவதற்கு முன்பே அதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தன. கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று போரட்டம் நடத்தின. அதன் பிறகு கடும் கெடுபிடியில், காலா திரைப்படம்கர்நாடகாவில் வெளியானது. இந்த படம் ரிலீசுக்கு முன்பே சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டது. முதலீடு செய்த பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று படதயாரிப்பாளர்கள் மத்தியில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.

படம்வெளியானதும்அனைத்துதிரையரங்குகளிலும்கூட்டம்நிரம்பிவழிந்தது.  ஆனால் படத்தின் முதல் நாள்வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று பேசப்பட்டது. பொதுவாக ரஜினி படங்கள் முதல் நாளிலேயே பல கோடி ரூபாய் வசூலை அள்ளிக்குவிக்கும். ஆனால்மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான காலா படத்துக்கு வசூல் குறைந்துள்ளதாக கூறப்பட்டது. படத்தின்முதல் நாள் நிலவரம் குறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அளித்தபேட்டியில் முதல் நாள் வசூல் குறைவாக இருந்ததாக கூறியிருந்தார். தற்போது உள்ள நிலவரப்படி காலா படம் எதிர்பார்த்ததைவிட வசூலை அள்ளி குவித்துவருவதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.  காலாபடம் வெளியான அதே நாளில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிப்பதற்காக டார்ஜிலிங் புறப்பட்டு சென்றுவிட்டார். கார்த்திக்கு சுப்புராஜ் இயக்கும் இந்த புதிய படத்தில் கடந்த 8 நாட்களாக இடைவிடாமல் நடித்து வருகிறார்.

அவர் இன்னும் ஒரு மாதம் அங்கு தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டார்ஜிலிங் சுற்றுலாதளம் என்பதால் அங்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கிறார்கள். இதனால் ரஜினிகாந்த் படபிடிப்பு நடைபெறும் இடங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.  டார்ஜிலிங்கில் படபிடிப்பில் கலந்துகொண்டபோது தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர், காலாபடம் நாடு முழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒத்துழைப்போடு நன்றாக ஓடுகிறது என்று கூறினார்.

ரஜினிகாந்த் இன்னும் ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பிறகே திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.